செயற்கை நுண்ணறிவு
1.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி மற்றும் அதன் போக்குகளை ஆராய்ந்து, வேலையிழப்பு நேரும் துறைகள் எவை என அடையாளம் கண்டு, அத்துறையினருக்கு மாற்றுப் பயிற்சியினை போர்க்கால அடிப்படையில் அளிப்பது சமூகநீதி அரசின் கடமை. இத்தகைய சூழலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு 'தமிழ்நாடு Al Mission 2.0' செயல்பட வழிநடத்தும்.
2.
செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் புயல்வேக மாற்றங்களை உருவாக்கும் என்ற கணிப்பு இருக்கிறது. நமது பள்ளிகளில் வகுப்பறைகள் இயங்கும் விதமும், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோய் கண்டறியும் விதமும், சாலைகளில் இயங்கும் போக்குவரத்து விளக்குகளின் (Traffic Lights) கட்டுப்பாட்டு முறைகளும், வேளாண்மை ஆலோசனைகள் வழங்கும் முறைகளும், நீர் மேலாண்மை தொடங்கி அனைத்து மேலாண்மை முறைகளும் பெரும் மாற்றங்களை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தப் பேராற்றலை ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு மக்களின் நலனை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ஏதுவான வழிமுறைகளும், அமைப்புகளும் உருவாக்கப்படும். இந்தப் பேராற்றலைப் பயன்படுத்தத் தேவையான மனிதவள ஆற்றலை உருவாக்குதல் முதல் படியாகும். இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
+3 மேலும்...